Item Post Navigation Display

Sunday, April 14, 2019

சாலை விபத்து.. கோயிலுக்கு சென்று திரும்பிய 3 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகில் உள்ள சித்துக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தேன்மொழி அவரது மகள் மொளனிகா (20)., பக்கத்து வீட்டில் உள்ள சஞ்சய் (10) ஆகிய மூவரும் சித்திரை முதல் நாள் என்பதால் ஒரு பைக்கில் மாங்காடு விடங்ஸேவரர் கோயிலுக்கு சென்று தரிசனம் முடிந்து ஊருக்கு திரும்பியுள்ளனர். மொளனிகா பைக் ஓட்டியுள்ளார்.

ஆவணம் கடந்து செருவாவிடுதி செல்லும் சாலையில் பழைய சோதனைச்சாவடி அருகே திருச்சிற்றம்பலத்தில் இருந்து அணவயல் நோக்கிச் சென்ற லாரி மோதிய விபத்தில் தேன்மொழியும் மோனிஷாவும் சம்பவ இடத்திலும் சஞ்சய் பட்டுக்கோட்டை மருத்துவ மனைக்குச் செல்லும் வழியிலும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தர்மராஜ் மற்றும் கிளீனர் தப்பி ஓடிவிட்டனர். லாரி அணவயல் நெல் வியாபாரி கணேசன் என்பவருக்கு சொந்தமானது. திருச்சிற்றம்பலத்திற்கு தவிடு மூட்டைகள் கொண்டு சென்று இறக்கிவிட்டு திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் இறந்த 3 பேர் சடலங்களும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது..

No comments:
Write comments