Item Post Navigation Display

Sunday, April 7, 2019

அறந்தாங்கியில் பெரியார் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்துக் கழகம் அருகே பெரியார் சிலை வைக்கப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் இங்கு சென்ற மர்ம நபர்கள் சிலர் சிலையை தாக்கியதில் தலைப்பகுதி உடைந்து கீழே விழுந்தது. விடியற்காலையில் அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் இதுபற்றி தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

No comments:
Write comments